மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#Breaking: மின் இணைப்பை ஆதரோடு இணைக்க ஜனவரி 31 வரை காலக்கெடு நீட்டிப்பு.. அதிரடி உத்தரவு.!
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மின்நுகர்வை உபயோகம் செய்து வரும் பயனர்கள், தங்களின் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் நம்பரை பதிவு செய்ய வேண்டும் என தமிழ்நாடு மின்வாரியத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்து இருந்தார்.
இதற்காக மின்வாரிய அலுவலகங்களில் சிறப்பு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. இணையவழியிலும் ஆதார் - மின் இணைப்பு எண்ணை இணைத்துக்கொள்ள வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. டிசம்பர் 31ம் தேதிக்குள் அனைவரும் ஆதாரை இணைக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில், இன்னும் பலர் மின் இணைப்புடன் ஆதார் நம்பரை இணைக்காமல் இருப்பதால், அவர்களுக்காக கூடுதல் அவகாசம் வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, ஜனவரி மாதம் 31ம் தேதிக்குள் மின் இணைப்புடன் ஆதார் நம்பரை இணைத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.