"அய்யோ திருமணமா.?! எப்பவுமே இல்ல" பொன்னியின் செல்வன் நடிகை.. பகீர் அறிவிப்பு.!
#சென்னை : ஆடி ஆஃபேரில் டீ வாங்கினால் தக்காளி ஃப்ரீ.. அலைமோதும் கூட்டம்.!
நாடு முழுவதும் தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது. தக்காளி விலை கிலோ 200 ரூபாய் தாண்டி விற்பனையாகி வருகின்றது. கடந்த சில நாட்களாகவே விவசாயிகள் பலரும் தக்காளி விற்றே கோடீஸ்வரர், லட்சாதிபதியான சம்பவங்கள் அரங்கேறி சமூக வலைதளங்களில் வீடியோவாக பரவி வருகின்றன.
இந்த நிலையில் தமிழகத்தில் 500 ரேஷன் கடைகளில் கிலோ 60 ரூபாய்க்கு தக்காளி விற்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி வரத்து அதிகமானதை தொடர்ந்து விலை குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
அதே சமயத்தில் கிலோ ரூ.170 மற்றும் ரூ.160 ரூபாய்க்கு விற்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், சென்னை கொளத்தூர் பகுதியில் இருக்கும் ‘வி சாய்’ என்ற டீக்கடை ஒன்றில் 3 நாட்களுக்கு மாலை 4 மணியிலிருந்து ஆறு மணி வரை 300 பேருக்கு ஒரு டீ வாங்கினால் ஒரு கிலோ தக்காளி இலவசம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், அன்றாடம் மாலை நேரத்தில் அந்த கடையில் மக்கள் கூட்டம் முண்டியடித்துக் கொண்டு டீ வாங்கி தக்காளியை இலவசமாக பெற்று வருகின்றது.