மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#Breaking: 90 நாட்கள் கெடாத ஆவின் டிலைட் பால் அறிமுகம்.. 3 மாதத்திற்குள் உபயோகம் செய்யலாம்., விலை ரூ.30 தான்..!
ஆவின் டிலைட் பாலினை 90 நாட்கள் சேமித்து வைத்து உபயோகம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உணவுப்பொருட்கள் பதப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்படுவது தொடங்கியதில் இருந்து, ஒவ்வொரு பொருட்களும் பதப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இதில், பால் மற்றும் அது சார்ந்த பொருட்களுக்கு விதிவிலக்கல்ல.
கிராமப்புறங்களில் பால் வீடுகளில் பசுவிடம் இருந்து கரைக்கப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது. இவை பால் உற்பத்தி தொழிற்சாலைகளுக்கு எடுத்து செல்லப்பட்டு, பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யப்படுகிறது. இவை கெடாமல் இருக்க உடலுக்கு தீங்கு இழைக்காத வேதிப்பொருட்கள் குறிப்பிட்ட அளவு செலுத்தப்படுகிறது.
இவ்வகை பால் பாக்கெட்டுகள் குளிர்பதன நிலையில் எத்தனை நாட்கள் கெடாமல் இருக்கும் என அந்தந்த பாக்கெட்டுகளிலேயே குறிப்பிடப்பட்டு இருக்கும். இந்த நிலையில், ஆவின் நிறுவனத்தின் டிலைட் பால் குளிர்பதன வசதிகள் இன்றி 3 மாதங்கள் வரை வைத்து பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆவின் டிலைட் பால் எவ்வித குளிர்பதன வசதியும் இன்றி அதிகபட்சமாக 90 நாட்கள் வரை சேமித்து வைத்து உபயோகம் செய்யலாம் என்றும், இதன் விலை 500 மிலி பாக்கெட்டுக்கு ரூ.30 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாலில் எவ்வித வேதிப்பொருளையும் சேர்க்காமல் நவீன தொழில்நுட்ப முறையில் தயார் செய்யப்பட்டுள்ளது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.