பெற்ற குழந்தைகளை அபிராமி கொலை செய்ததற்கு காரணம் இதுதான்!. கண்ணீருடன் கூறும் அபிராமியின் தந்தை!.



Abirami father talking with crying about his daughter

கள்ளக்காதலுக்காக பெற்ற இரண்டு அழகான குழந்தைகளையும் விஷம் வைத்து கொடூரமாக கொலை செய்த அபிராமியின் தந்தை மனவேதனையுடன் பேசியுள்ளார். அவர் பேசுகையில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த நாங்கள் 20 வருடங்களுக்கு முன்பு குடும்பத்துடன் சென்னைக்கு குடி வந்துவிட்டோம்.

அபிராமி என்றால் எங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் செல்லம். இயல்பாகவே மிகவும் அழகு என்பதால் அவள் கேட்பதையெல்லாம் நாங்கள் வாங்கிக் கொடுத்து வந்தோம். அபிராமிக்கு இளம்வயதில் இருந்தே பிடிவாத குணம் உடையவள். அபிராமி நினைத்ததை அடைந்தே தீருவேன் என்ற மனப்பாண்மை கொண்டவர். தான் பெற்ற குழந்தைகள் என்று கூட பாராமல் கொலை செய்யும் நிலைக்கு அந்த குணம் சென்றுள்ளது.

8 ஆண்டுகளுக்கு முன்னர் விஜய்யை காதலிக்கிறேன் திருமணம் செய்துவையுங்கள் என கூறினாள். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவித்தோம். விஜய்யின் கடைசி வரை எதிர்ப்பு தெரிவித்தும் அபிராமியின் பிடிவாதத்தால் திருமணம் செய்துகொண்டனர். 

abirami killed children

திருமணம் நடந்தபின்னர் இருவரும் சந்தோஷமாக இருந்தனர். இரண்டு குழந்தைகள் பிறந்தது. அபிராமியின் பிறந்தநாள் பரிசாக கணவர் ஸ்கூட்டியை பரிசாக அளித்துள்ளார். அதில் இருந்துதான் அவளது போக்கு முற்றிலும் மாறத் தொடங்கியது. அடிக்கடி ஸ்கூட்டியிலேயே வெளியே சென்றுவர ஆரம்பித்தாள். அபிராமிக்கு எப்பொழுதும் தன்னை அழகுபடுத்திக் கொள்ளும் ஆர்வம் அதிகம் இருக்கும். 

அபிராமி இரண்டு குழந்தைகளுக்கு தாய் என்பதையும் மறந்து, கணவன் சம்பாதிக்கும் பணத்தை, பியூட்டி பார்லருக்கு சென்று அலங்கரித்து கொள்வது, ஓட்டலுக்கு சென்று விதவிதமாக சாப்பிடுவது போன்ற காரியங்கள் செய்தபோதுதான் பிரியாணி கடை சுந்தரத்தின் நட்பு கிடைத்து அது கள்ளக்காதலாக மாறியது.

abirami killed children

கொலை நடப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பகூட தனது இரண்டு பிள்ளைகளையும் தவிக்க விட்டுவிட்டு சுந்தரத்தின் வீட்டில் போய் இரண்டு நாள்களாக தங்கி விட்டாள். நன் தான் சென்று புத்திமதி கூறி அழைத்துவந்தேன்.

எனது பேரப்பிள்ளைகள் இரண்டும் தாத்தா தாத்தா என்று என்னை அழைப்பது என் காதில் கேட்டுக் கொண்டே இருக்கிறது. அவளது பேராசை மற்றும் உல்லாசப் போக்கால்தான் இந்த அளவுக்கு கொடூர மனம் வந்து விட்டது. இன்று தண்டனை அனுபவிக்கிறாள்.

வயதான காலத்தில் என் இறப்பிற்குப் பிறகு, எனக்கு கொள்ளி போட வேண்டிய என் பேரப் பிள்ளைகளுக்கு, இன்று நான் கொள்ளி போடும் நிலைமை வந்து விட்டது. என் நிலைமை எதிரிக்குக் கூட வரக்கூடாது என கண்ணீருடன் கூறினார்.