திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
குழந்தைகளை கொல்ல அபிராமி கொடுத்தது தூக்கமாத்திரை அல்ல வேறு மாத்திரை, வாக்குமூலத்தில் வெளிவந்த அதிரவைக்கும் தகவல்,
சென்னையில் தனது இரு குழந்தைகளையும் கொன்று விட்டு, தனது கணவரையும் கொல்ல முயற்சித்த அபிராமி என்ற பெண் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி கொண்டே உள்ளன.
குழந்தைகளைக் கொலை செய்ய தூக்க மாத்திரைகள் எப்படி கிடைத்தது என அபிராமியிடம் விசாரணை நடத்தியதில் அதிர வைக்கும் உண்மையை கூறியுள்ளார்.
தான் குழந்தைகளை கொல்ல பயன்படுத்தியது தூக்க மாத்திரைகள் இல்லை என்றும், அது மாதவிடாய் காலகட்டத்தில் பயன்படுத்தும் மாத்திரைகள் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், தன்னிடம் 5 மாத்திரைகள் இருந்ததாகவும், பாலில் அதிகளவில் மாத்திரைகளை கலந்து சாப்பிட்டால் உயிரிழப்பு ஏற்படும் என நினைத்து கலந்து கொடுத்ததாகவும் கூறியுள்ளார்.
ஆனால், அவசரத்தில் மாத்திரைகள் சரியாகக் கரையாத காரணத்தினால்,பாலை கடைசியாகக் குடித்த குழந்தை கார்னிகா அநியாயமாக இறந்துள்ளது.
வெறும் 2 மாதம் பழகிய சுந்தரத்திற்காக எப்படி இந்த அளவுக்கு செய்ய துணிய முடிந்தது என்று கேட்டதிற்கு 'அவரை முழுமையாக நம்பினேன்' என்று கூறி அதிர வைத்துள்ளார்.