திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
விபத்து.. கார் மோதி இரு சக்கர வாகனத்தில் சென்றவர் பலி.!
சென்னை, அயனாவரம் பகுதியை சேர்ந்த பிரேம்குமார் வில்லிவாக்கம் பகுதியில் பழைய பொருட்கள் வாங்கும் கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் சம்பவத்தன்று பிரேம்குமார் தனது கடையில் வேலை முடித்துவிட்டு வீட்டிற்கு செல்வதற்காக தனது இரு சக்கர வாகனத்தில் புறப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து பிரேம்குமார் நியூ ஆவடி சாலையில் வில்லிவாக்கத்தில் இருந்து அண்ணாநகர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது பிரேம்குமார் அண்ணாநகர் வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகில் சென்று கொண்டிருந்தபோது அந்த வழியே வந்த கார் அவரது இரு சக்கர வாகனம் மீது மோதியுள்ளது. இதில் தூக்கி வீசப்பட்ட பிரேம்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து சம்பவம் குறித்து தகவலறிந்த காவல் துறையினர் உடனடியாக அங்கு வந்து பிரேம்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் காவல் துறையினர் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் தப்பி சென்ற கார் ஓட்டுநரை தேடி வருகின்றனர்.