திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
புதிதாக கட்டபட்ட கட்டிடத்தை ஆய்வு செய்த அமைச்சர் செல்லூர் ராஜூ! நூலிழையில் தப்பிய பரபரப்பு சம்பவம்!
மதுரை அருகே அமைச்சர் செல்லூர் ராஜூ நின்று கொண்டு இருந்த புதிய கட்டிடத்தில் டைல்ஸ் உடைந்து பள்ளம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரையை அடுத்த, செல்லூர் ரவுண்டானா பகுதியில் மாநகராட்சி சார்பில் கட்டப்பட்டிருந்த ரவுண்டானாவை பார்வையிட்ட அமைச்சர் செல்லூர் ராஜூ, அங்கு கபடி வீரர்கள் சிலை அமைக்கப்படவுள்ள இடத்தை ஆய்வு செய்தார்.
செல்லூரில் ரவுண்டானாவுடன் கூடிய கபடி வீரர்களின் சிலை அமைக்கும் பணி நடந்துவரும் நிலையில் அங்கு அமைச்சர் செல்லூர் ராஜூ ஆய்வு செய்தபோது, டைல்ஸ் தரை திடீரென உடைந்து 5 அடிக்கு பள்ளம் ஏற்பட்டது. இதில் பின்னால் வந்துகொண்டிருந்த தொண்டர்கள் பலரும் தவறி விழுந்த நிலையில் அமைச்சர் செல்லூர் ராஜூ அதிர்ஷ்டவசமாக தப்பினார்.+
இந்த விபத்தில் உடனிருந்த அதிமுக கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பலர் உள்ளே விழுந்தனர். அமைச்சர் செல்லூர் ராஜு அதிர்ஷ்டவசமாக நூலிழையில் தப்பினார். திறப்பு விழா காணாத புதிதாக கட்டப்பட்டுள்ள ரவுண்டானா இடிந்து விழுந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.