திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
உயிரிழந்த கணவனை சொந்த ஊருக்கு எடுத்து சென்ற போது மனைவியும், மகனும் விபத்தில் மரணம்!.
திருச்சி அருகே நாச்சிக்குறிச்சியைச் சேர்ந்தவர் பாபு. இவர் சென்னை சிட்லபாக்கத்தில் இருக்கும் இந்தியன் வங்கிக் கிளையில் மேலாளராகப் பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்நிலையில், பாபு உடல்நிலை கோளாறு காரணமாக உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் அவரின் உடலை பாபுவின் சொந்த ஊரான திருச்சி மாவட்டம் நாச்சிக்குறிச்சிக்கு கொண்டு செல்ல பாபுவின் மனைவி ராதா மற்றும் உறவினர்கள் முடிவு செய்துள்ளனர்.
இதனையடுத்து பாபுவின் உடல் ஒரு ஆம்புலன்சில் கொண்டு செல்லப்பட்டது. அவரின் மனைவி ராதா, மகன் அம்பரீஷ், மகள் சோனியா ஆகியோர் மற்றொரு காரில் ஆம்புலன்சை பின் தொடர்ந்து சென்றுள்ளனர்.
அவர்கள் சென்ற கார் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டைஅருகே செல்லும்போது, சாலையோரம் நின்ற லாரி மீது திடீரென்று மோதியது. கார் பலமாக மோதியதில் பாபுவின் மனைவி ராதா, மகன் அம்பரீஷ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த தகவலை அறிந்து சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து வந்த காவல்துறையினர் விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கணவரின் சடலத்தைப் பின்தொடர்ந்து சென்ற மனைவியும், மகனும் விபத்தில் உயிரைவிட்ட சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.