திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்..!!
தமிழகத்தில் 22 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழக கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஈரோடு, நீலகிரி, சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், நாகை, பெரம்பலூர், சேலம், தருமபுரி உள்ளிட்ட தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களிலும், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் உள்ளிட்ட வடமாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தென் தமிழக மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், கோவை, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களிளும் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மைய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.