ஏழைக் குழந்தைகளுக்காக நடிகை கவுதமி செய்துள்ள காரியம்; குவியும் பாராட்டுகள்.!



actor kavuthami - thiruvannamalai - education centre

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை கவுதமி. தற்போது சினிமாவில் அதிக படங்களில் நடிக்கவில்லை என்றாலும் அவ்வப்போது சில படங்களில் நடித்து வருகிறார் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு பின்னர் தீவிர சிகிச்சையால் குணமடைந்தார். 

அதுமுதல் பல்வேறு சமூக சேவைகளை செய்து வருகிறார். லைப் அகைன் இந்தியா' என்ற நிறுவனத்தை தொடங்கிய நடிகை கௌதமி கேன்சர் நோயாளிகளுக்கு உதவி செய்வதற்காக கடந்த சில வருடங்களாக அமைப்பு ஒன்றை தொடங்கி நடத்தி  வருகிறார். இந்த அமைப்பு மூலம் புற்று நோய் உள்ளவர்களை தைரியப்படுத்துவதோடு, அவர்களின் மேல் சிகிச்சைக்கு தன்னால் முடிந்த உதவியை  செய்து வருகிறார்.

இந்நிலையில், திருவண்ணாமலையில் கல்வி மையம் ஒன்றை நிறுவி ஏழை குழந்தைகளுக்கு இலவசமாக கணக்கு மற்றும் ஆங்கில பாடங்களை ஆசிரியர்களை கொண்டு கற்பிக்க உள்ளார். மேலும் நாட்டின் எதிர்காலமான குழந்தைகளின் வருங்கால கல்விக்காக உதவி செய்ய அவர் காத்திருக்கிறார்.