திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
பிரபல தமிழ் நடிகரின் மனைவியை கட்டிப்போட்டு நகை & பணம் திருட்டு., 3 பேர் கும்பலால் நடந்த சம்பவம்.. அதிர்ச்சியில் தமிழ் திரையுலகம்.!
எல்லாம் அவன் செயல் படத்தின் நடிகர் ஆர்.கே மனைவியை கட்டிப்போட்டு 3 பேர் கொள்ளை கும்பல் நகை, பணத்தை பறித்து சென்ற சம்பவம் நடந்துள்ளது.
ராதாகிருஷ்ணன் என்ற இயற்பெயரை மாற்றிக்கொண்டு தமிழ் திரையுலகில் நடிகராகவும், தயாரிப்பாளராகவும் வலம்வந்தவர் நடிகர் ஆர்.கே. இவரின் நடிப்பில் வெளியான எல்லாம் அவன் செயல் திரைப்படம் தமிழக மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இவர் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும், ஆர்.கே திரைப்படம் அவருக்கென அங்கீகாரம் தந்தது.
இவர் தனது மனைவியுடன் சென்னை நந்தம்பாக்கத்தில் இருக்கும் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், சம்பவத்தன்று இவர் வீட்டில் இல்லை. அப்போது, இவரது வீட்டின் பின்பகுதி வழியே வருகை தந்த 3 பேர் கும்பல், ஆர்.கே-வின் மனைவியை கட்டிப்போட்டு 200 சவரன் நகைகள், ரூ.2 இலட்சம் நகை ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளது.
இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த நடிகர் ஆர்.கே, கொள்ளை சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் திரைஉலகினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.