மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தாமதமாகும் விஜய் மகன் சஞ்சய் திரைப்படம்.. காரணம் இதுதானா?
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தளபதி விஜய். இவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். இதில் இவருடைய மகன் சஞ்சய் வெளிநாட்டில் சினிமா சம்பந்தமான படிப்பை படித்து முடித்துவிட்டு குறும்படம் ஒன்றை இயக்கியிருந்தார்.
இந்த நிலையில் லைகா நிறுவனம் சார்பாக திரைப்படம் இயக்கப் போவதாக அறிவிப்பு வெளியாகிறது. ஆனால், அதன் பிறகு எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகவில்லை.
இந்த நிலையில் நேற்று முன்தினம் சென்னையில் ரகசியமாக படத்தின் பூஜை நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பூஜையில் சஞ்சய் மற்றும் தயாரிப்பு நிறுவனத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.
இந்த படத்தின் தாமதம் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி படத்தின் திரைக்கதையை எழுதி வரும் சஞ்சய்க்கு தமிழ் எழுத படிக்க தெரியாததால் தாமதமாகி வருவதாக கூறப்படுகிறது. அதன் காரணமாக அவர் ஆங்கிலத்தில் எழுதுவதை தமிழில் மொழிபெயர்க்க ஒரு ஆள் வைத்து வேலைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.