மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
Violence டயலாக்கில் Marriage பன்ச்.. வைரலாகும் ராக்கியின் வெறித்தன ரசிகனின் திருமண அழைப்பிதழ்.!
கே.ஜி.எப் இரண்டாம் பாகத்தின் வயலன்ஸ் டயலாக்கை மாற்றி திருமணத்திற்க்கு யாஷின் ரசிகர் வைத்துள்ள நிகழ்வு வைரலாகி வருகிறது.
நடிகர் யஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், ரவீனா, அர்ச்சனா, ராமச்சந்திரா ராஜு உட்பட பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் கே.ஜி.எப். இந்த படத்திற்கு மக்கள் மத்தியில் மாநிலம் கடந்து இந்திய அளவில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், கே.ஜி.எப் பாகத்தின் 2 ஆம் பாகம் வெளியாகி மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.
மேலும், இரண்டு பாகத்திலும் அம்மா செண்டிமெண்ட், பல அதிரடி டயலாக்குகள் வைரலானது. இரண்டாம் பாகத்தில் Violence தொடர்பான டயலாக் மிகவும் வைரலாகி வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், இதே டயலாக்கை வைத்து நபரொருவர் திருமண அச்சிதழ் தயார் செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது
அந்த அச்சிதழில், "அன்புள்ள நண்பர்களே ஒரு நிகழ்வு, இரண்டு இதயம், மூன்று முடிச்சு, ஏழு படிகள், 12-க்கும் மேற்பட்ட சத்தியங்கள், முழு வாழ்க்கைக்கான புரிதலின்படி சந்திரசேகர் - சுவேதா தம்பதிகள், தங்களது பெற்றோர் மற்றும் உறவினர் முன்னிலையில் திருமணம் செய்ய இருக்கிறார்கள்.
இந்த திருமணம் மே மாதம் 13 ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. கர்நாடக மாநிலத்தில் உள்ள பெலகாவி மாவட்டம், கிட்டூர் நகரில் இருக்கும் ரம்பா கல்யாண மண்டபத்தில் திருமணம் நடைபெறுகிறது. அனைவரும் வந்து வாழ்த்த வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறோம்.
கல்யாணம்., கல்யாணம்., கல்யாணம்.. எனக்கு கல்யாணத்தில் விருப்பமில்லை. நான் தவிர்த்தேன்., ஆனால் எனது உறவினர்கள் எனது கல்யாணத்தை விரும்புகிறார்கள்., என்னால் அதனை மறுக்க முடியவில்லை" என்று பதிவிட்டுள்ளார். இது வைரலாகி வருகிறது.
"Marriage Marriage Marriage.. I don't like it.. I avoid. But my relatives like marriage.. I can't avoid"