மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடேங்கப்பா...14 கிலோ தங்கத்துடன் வலம் வந்த மர்ம ஆசாமிகள்.. கையும் களவுமாக போலீசில் சிக்கியது எப்படி..?
சென்னை அடுத்த சௌகார்பேட்டையில் வாகன சோதனையின் போது முறையான ஆவணங்கள் இன்றி 14 கிலோ தங்க நகையுடன் பிடிபட்ட இரண்டு மர்ம அசாமிகளை வருமான வரித்துறை அதிகாரிகளிடம் போலீசார் ஒப்படைத்துள்ளனர்.
சௌகார்பேட்டையில் ஞாயிற்றுக்கிழமை மண்ணடியில் கணக்கில் காட்டப்படாத 77 லட்சம் ரூபாய் ஹவாலா பணம் பிடிபட்டது. இதனால் போலீசார் தொடர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆதியப்பா தெருவில் போலீசார் வாகன சோதனை நடத்தியதில் சந்தேகத்திற்கு இடமான மர்ம நபர்கள் இருவர் இருசக்கர வாகனத்தில் அங்கும் இங்கும் சென்றுள்ளனர்.
இதனைக் கண்ட போலீசார் அவர்களை மடக்கி பிடித்து சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடத்தியபோது அவர்களிடம் ஏராளமான செயின்கள், வளையல்கள் ,மோதிரம் போன்ற தங்க நகைகளும் போலி ஆவணங்களும் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார் முறையான விசாரணை நடத்தி வருகின்றனர்.