#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
மேலும் ஒரு அதிமுக எம்.எல்.ஏ-வுக்கு கொரோனா தொற்று உறுதி! மருத்துவமனையில் அனுமதி!
உலகத்தையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்திலும்,கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை மற்றும் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் இதுவரையில் இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் 5,849 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,86,492 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.
கொரோனாவால் பொதுமக்கள் வீட்டிற்குள் முடங்கி கிடக்கும் நிலையில் மக்களுக்கு உதவி செய்யும் வகையில் ஆரம்பத்திலிருந்து அரசு, தன்னார்வலர்கள், அரசியல் கட்சியினர் ,என பல்வேறு தரப்பில் களத்தில் இறங்கி உதவி செய்து வருகின்றனர். இந்தநிலையில், களத்தில் பணியாற்றும் நபர்களுக்கு கொரோனா உறுதியாகி வந்தது. கொரோனா தடுப்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ள எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தராசுவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதியானதை அடுத்து எம்.எல்.ஏ கோவிந்தராசு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட எம்எல்ஏகளின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.