மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஊடகங்களுக்கு அதிமுக எச்சரிக்கை! இனி ஊடகங்கள் இதனை செய்ய முடியாதா?
கட்சி அங்கீகரிக்காதவர்களிடம் கருத்துக் கேட்கக்கூடாது என ஊடகங்களுக்கு அதிமுக தலைமை கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கட்சிக்கு தொடர்பு இல்லாதவர்களிடம், அதிமுக குறித்து கருத்துக் கேட்டால் சம்பந்தப்பட்ட ஊடகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிமுக சார்பில் ஊடகங்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
அதிமுக சார்பில் ஊடகங்களில் கட்சியினர் யாரும் தன்னிச்சையாக கருத்து கூறவேண்டாம் என்று 2 தினங்கள் முன்பு எச்சரித்திருந்தது அதிமுக தலைமை. மேலும், அதிமுக சார்பில் கருத்துதெரிவிக்க கழகத்தின் செய்தித் தொடர்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் கழகத்தின் பிரதிநிதிகள் என்று யாரையும் உங்களது ஊடகம் வழியாக கருத்துக்களை தெரிவிக்க அனுமதிக்க வேண்டாம். இதனை மீறி, ஊடகங்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க எங்களை ஆட்படுத்த மாட்டீர்கள் என்று நம்புகிறோம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.