மீண்டும் உயர்ந்த தக்காளி விலை.. காரணம் என்ன தெரியுமா!!
தமிழகத்தில் தொடர் மழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக காய்கறிகளின் விலை அதிகரித்து காணப்படுகிறது.அதிலும் சமையலுக்கு அதிகம் பயன்படும் தக்காளியின் விலை கிலோ ரூ120 முதல் ரூ160 க்கு விற்பனையானது.
இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்திலிருந்து 10 லாரிகளில் தக்காளி வந்ததால் கிலோ 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. மகாராஷ்டிராவிலிருந்து கொண்டுவரப்படும் தக்காளி லாரிகளுக்கு போக்குவரத்து செலவு அதிகமாவதால் 4வது நாளாக தக்காளி லாரிகள் வரவில்லை.
தக்காளி வரத்து குறைந்ததை அடுத்து மீண்டும் சென்னை கோயம்பேட்டில் உள்ள காய்கறி மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.