"சாராயக்கடையை மூடுங்க".. 10 வயதுசுல இருந்து என் பிள்ளை குடிக்கிறான் - தாய் கண்ணீர் குமுறல்.!



in Tenkasi a Mother Feeling Sad about Son Alcohol Addiction and Demand Govt to Ban Liquor Tasmac 

 

10 வயதில் இருந்து கடந்த 10 ஆண்டுகளாக எனது மகன் குடிக்கிறான். அவன் ஒழுங்காக இருந்தால், எனது வீடை நானே கட்டிவிடுவேன். அதற்கு அரசு எனது பகுதியில் உள்ள டாஸ்மாக்கை மூட வேண்டும் என பெண் கோரிக்கை வைத்தார்.

தென்காசி மாவட்டத்தில் வசித்து வரும் 45 வயதுடைய பெண்மணி, சம்பவத்தன்று தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு முகாமில் கலந்துகொண்டார். அங்கு வந்த பெண்மணி, டாஸ்மாக் கடைகளை மூடக்கூறி ஆட்சியரிடம் கோரிக்கை மனு ஒன்றை வழங்கினார். 

இதையும் படிங்க: நடத்தையில் சந்தேகம்... மனைவி கொடூர கொலை.!! கணவன் தற்கொலை.!!

மாட்டுக்கொட்டகையில் இருக்கிறோம்

இந்த விஷயம் குறித்து செய்தியாளர்கள் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது, அவர் பேசுகையில், "எனக்கு சொந்தமான வீடு ஒன்று 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. தற்போது அந்த வீடு இடியும் நிலையில் இருக்கிறது. இதனால் அதிகாரிகள் வீட்டில் இருக்க வேண்டாம் என அறிவுறுத்தினார்கள். தற்போது மாட்டுக்கொட்டகையில் தங்கி இருக்கிறோம். 

ஊதாரி மகன்

எனக்கு 45 வயது ஆகிறது, 2 மகன்கள் இருக்கிறார்கள். ஒரு மகனுக்கு திருமணம் முடிந்துவிவிட்டது. மற்றொரு மகன் தனது 10 வயதில் இருந்து குடிப்பழக்கத்திற்கு ஆளாகி, இன்று வரை குடிகாரனாக இருக்கிறார். அவ்வப்போது வேலைக்கு சென்றாலும், அந்த பணத்தை அவர் குடிக்க பயன்படுத்திவிடுவார். 

டாஸ்மாக்கை மூடுங்க

அதுபோதாது என என்னிடமும் பணம் வாங்கி குடிப்பார். நான் துப்புரவு தொழிலாளியாக தென்காசியில் வேலை பார்த்து வருகிறேன். எனது பகுதியில் இங்கும் டாஸ்மாக் கடையை மூடினால், மகன் வேலைக்கு சென்று வீட்டு பணிகளை கவனிப்பார். எனக்கு வீடு அரசு கட்டிக்கொடுக்க வேண்டும் என நான் வரவில்லை.

அரசு உதவிட கோரிக்கை

எனது பகுதியில் இருக்கும் டாஸ்மாக்கை மூடினால், மகனே வேலைக்கு சென்று வந்து எனது வீட்டினை கட்டி முடிப்பார். தினமும் எனது வாழ்க்கை போராட்டமாக சென்று, பிழைப்புக்காக இருந்த இரண்டு மாடுகளையும் விற்பனை செய்து தான் சாப்பிட்டு நாட்கள் கழிகின்றன. அரசு எங்களுக்கு உதவ வேண்டும் என கூறினார்.

இதையும் படிங்க: ஸ்கூட்டர், எல்இடி டிவி, 2.5 சவரன் செயின் பரிசு; ஆசையாக பேசி விழாக்கால மோசடி.. மக்களே உஷார்.!