தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
அட பார்றா.. வேலை களைப்பு தெரியாமல் இருக்க கோகோ விளையாட்டு.. வைரலாகும் வீடியோ.!
மத்திய அரசு கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்கு வேலைகளை ஏற்படுத்தி கொடுத்து, அதன் வாயிலாக உள்ளூரில் உள்ள ஏரி, குளம், கண்மாய் மற்றும் ஆறுகள் போன்றவற்றை தூர்வார தேசிய கிராமப்புற ஊரக பணிகளை ஏற்படுத்தியது. இந்த பணிகளில் உள்ளூரை சார்ந்த ஆண்கள், பெண்கள் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
ஆனால், ஊரக பணிகளில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுகிறது. பணியாளர்கள் மற்றும் பணியை மேற்பார்வையிடும் நபர்கள் என ஒவ்வொருவரும் முறைகேட்டில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் விவசாய பணிகளுக்கு ஆட்கள் கிடைக்காமல், விவசாயம் நலிந்து வருகிறது எனவும் கண்டன குரல்கள் எழுந்து வருகின்றன.
இந்த நிலையில், 100 நாள் வேலைத்திட்டத்திற்கு சென்றுள்ள பெண்கள் தங்களின் களைப்பை போக்க, 80 மற்றும் 90 காலங்களில் விளையாடிய கோகோ விளையாட்டை விளையாடி வருகின்றனர். இதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.