திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அட ச்சீ.. நீ எல்லாம் ஒரு அப்பாவா.. மகளுக்கு பாலியல் தொல்லை.. நீதிமன்றம் அளித்த அதிரடி உத்தரவு..!
திருப்பூரை சேர்ந்த தொழிலாளி ஒருவர் ஏற்கனவே திருமணமாகி குழந்தையுடன் இருந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வந்துள்ளார். மேலும் அந்தப் பெண்ணிற்கு முதல் கணவர் மூலம் 13 வயதில் மகள் ஒருவர் உள்ளார்.
இந்நிலையில் கடந்து 2020 ஆம் ஆண்டு மனைவி வேலைக்கு சென்று இருந்த நிலையில் தனியாக இருந்த மகளிடம் அவரது இரண்டாவது தந்தை பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ந்து போன அந்த சிறுமி நடந்தவற்றையெல்லாம் தனது தாயிடம் கூறி அழுதுள்ளார்.
இதனையடுத்து தனது இரண்டாவது கணவர் மீது சிறுமியின் தாய் போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் அந்த காமகொடூரனை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். இதனைத் தொடர்ந்து வழக்கனது நீதிமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் வழக்கை விசாரித்த திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி பாலு அந்த காமகொடூரனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார்.