மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அதிமுக - திமுக தொண்டர்கள் காவல் நிலையத்தில் மோதல்.. அதிமுக ஊராட்சி மன்ற துணைத்தலைவரின் கால்கள் உடைப்பு..!
திமுக - அதிமுக தொண்டர்கள் காவல் நிலையத்திலேயே மோதல் சம்பவத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மோதலில் அதிமுக ஊராட்சி துணை தலைவரின் கால்கள் உடைக்கப்பட்டது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி குப்பத்த மோட்டூர் ஊராட்சிக்கு சொந்தமான அரசு கட்டிடத்தை, கடந்த சில நாட்களுக்கு முன்னதாக திமுகவினர் இடிக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது. இந்த விஷயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவை சார்ந்த கிராம துணை தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அன்றைய நாளிலேயே திமுகவினர் அதிமுகவினரை தாக்கிய நிலையில், இதுகுறித்து திருவலம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், இன்று இருதரப்பையும் காவல் துறையினர் விசாரணைக்காக வரவழைத்துள்ளனர்.
விசாரணையின் போதே, திமுகவை சார்ந்தவராகள் அதிமுக துணைத்தலைவர் சதீஷ் குமாரின் மீது கல்லை தூக்கிப்போட்டு கால்களை உடைத்துள்ளனர். திமுக ஒன்றிய தலைவர் நந்திவர்மன் தலைமையிலான திமுகவினர் இவ்வாறு செய்ததாக அதிமுகவினர் குற்றச்சாட்டை முன்வைத்து புகார் தெரிவித்துள்ளனர்.
காவல் நிலையத்தில் அதிமுக ஊராட்சி மன்ற துணைத்தலைவர் கால்கள் உடைக்கப்பட்ட நிலையில், வலியால் அலறிக்கொண்டு இருந்த சதீஷை மீட்டு அதிமுகவினர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்துள்ளனர். இதனால் காவல் நிலையத்தில் பெரும் பரபரப்பான சூழ்நிலை உருவாகியுள்ளது. மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடமும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.