திமுக என்றாலே நினைவுக்கு வருவது இதுதான்.. எடப்பாடி பழனிச்சாமி காரசார விளாசல்..!



AIADMK Edappadi Palanisamy

மக்களுக்காக சாதனை செய்யாத திமுக, அதிமுக ஆட்சியில் உருவாக்கப்பட்ட திட்டங்களுக்கு தனது பெயரை வைத்து கொள்கிறது என்று எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி, திருத்தங்களில் வைத்து அதிமுக பொதுக்கூட்டம் நடந்தது. இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தொண்டர்களிடையே உரையாற்றினார்.

அந்த உரையில், "திமுகவினர் நீட் விளக்கு குறித்து மாற்றி மாற்றி பேசுகிறார்கள். நாம் கொண்டு வந்த திட்டத்திற்கு திமுகவினர் துவக்க விழா நடத்துகின்றனர். நாம் பெற்றெடுத்த பிள்ளைகளுக்கு அவர்கள் பெயர் வைக்கிறார்கள். மக்களுக்காக என்ன சாதனை செய்துள்ளார்கள்?.

AIADMK

அதிமுக தான் திராவிட மாடலை ஏற்படுத்தியது. திராவிட மாடல் என்று கூறுவதற்கு ஸ்டாலின் செய்தது என்ன?. அம்மா உணவகத்தை மூடுவதற்கு அரசு முயற்சி செய்து வருகிறது. பொங்கல் என்றாலே திமுகவின் பரிசு பொருட்கள் தான் நினைவுக்கு வருகிறது. மக்களுக்கு வழங்கும் பொருட்களில் கூட ஊழல் செய்தவர்கள் இவர்கள்.

மக்களின் வரிப்பணத்தில் இருந்து அரசின் சார்பில் அமல்படுத்தப்படும் திட்டத்தை உயர்கல்வித்துறை அமைச்சர் இழிவாக பேசுகிறார். பெண்கள் ஓசியில் பயணம் செய்வதாக கூறுகிறார். இவை அனைத்திற்கும் மக்கள் பாராளுமன்ற தேர்தலில் பதில் அளிப்பார்கள். மக்களே எஜமானர்கள்" என்று பேசினார்.