கார் பந்தத்தில் மக்களின் வரிப்பணத்தை வீணாக்கும் விடியா அரசு - எடப்பாடி பழனிச்சாமி கடும் விமர்சனம்.!



AIADMK Edappadi Palanisamy Pressment 2 Dec 2023 


கார் பந்தயத்திற்கான வழித்தடங்கள் இருந்தபோதிலும், புதிதாக அமைக்கிறோம் என ரூ.42 கோடியை செலவிடும் அரசின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

சேலம் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி, "கீழ்த்தட்டு மக்கள் வசிக்க வீடு இல்லை, பல இடங்களில் வடிகால் வசதி இல்லை. இதனால் மக்கள் அவதிப்படுகிறார்கள். ஆனால், விடியா திமுக அரசோ, மக்களின் வரிப்பணத்தை வீணாக்கும் பொருட்டு ரூ.242 கோடியை செல்வந்தர்கள் பார்த்து ரசிக்கும் கார் பந்தயத்திற்காக செலவிடுகிறது. அம்மா உணவகத்திற்கு உரிய நிதி ஒதுக்கப்படாமல் பல இடங்களில் அவை மூடப்பட்டுள்ளன.

இதில் ஏற்கனவே கார் பந்தயத்திற்கான வழித்தடங்கள் இருந்தபோதிலும், புதிதாக அமைக்கிறோம் என ரூ.42 கோடியை செலவிடுகிறார்கள். நகரின் மத்திய பகுதியில் கார் பந்தயம் நடத்தப்படுவது அவசியமா?. கார் பந்தயத்திற்காக இருங்காட்டுக்கோட்டையில் அமைக்கப்பட்டுள்ள இடத்தில் பந்தயம் நடத்தலாம். 

தற்போதைய கார் பந்தயத்தால் ஏழை மக்களுக்கு எந்த பலனும் இல்லை. விடியா திமுக அரசு விளம்பர அரசாகவே இருந்து வருகிறது. தவறு எங்கு நடந்தாலும் தண்டனை வழங்கப்படும் என்பது இந்திய அரசியலமைப்பு சட்டத்திலேயே இடம்பெற்றுள்ளது. இதில் அமலாக்கத்துறை, இலஞ்ச ஒழிப்புத்துறை வேறுபாடு கிடையாது" என தெரிவித்தார்.