#Breaking: சட்டப்பேரவையில் கடும் அமளி.. அதிமுகவினர் வெளியேற்றம் - சபாநாயகர் உத்தரவு.!



aiadmk-mla-out-from-tn-assembly-2025-meeting-day-1

 

2025 புத்தாண்டின் தொடக்கத்திற்கு பின்னர், தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் மாநில அரசுக்கு எதிராக பல்வேறு கேள்விகளை முன்வைக்க அதிமுக உட்பட எதிர்க்கட்சிகள் தயாராக இருந்தன. புத்தாண்டின் தொடக்கத்திற்கு பின் அவை கூடுகிறது என்பதால், ஆளுநர் ஆர்.என் ரவி உரையுடன் கூட்டம் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. 

இதையும் படிங்க: #Breaking: "வந்த வேகத்தில் இருந்து புறப்பட்டார்" - சட்டப்பேரவையில் இருந்து வெளியேறிய ஆளுநர்; அதிமுக, காங்கிரஸ், தவாக கோஷம்.!

அதிமுகவினர் வெளியேற்றம்

இதனிடையே, அவையில் அதிமுகவினர் ஆளுநரை முற்றுகையிட்டு கோஷம் எழுப்பிய காரணத்தால், ஆளுநர் ஆர்.என் ரவி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். அதனைத்தொடர்ந்து, அதிமுகவினர் அவைக்குள் தொடர் எதிர்ப்பு கோஷத்தினை பதிவு செய்தனர். சபாநாயகர் பலமுறை அவர்களை இருக்கையில் அமர கோரிக்கை வைத்தார். ஆனால், அதனை அதிமுகவினர் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் சபாநாயகர் அப்பாவு அதிமுகவினரை வெளியேற்ற கோரிக்கை வைத்தார். அதன்பேரில் அதிமுகவினர் வெளியேறிய நிலையில், சட்டப்பேரவை வளாகம் முன்பு அவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: #Breaking: சட்டப்பேரவையில் மெகா சம்பவம்.. "யார் அந்த சார்?" - அதிமுகவினர் பேட்ச் அணிந்து வருகை.!