மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காரின் டயர் வெடித்து சோகம்; அதிமுக பெண் நிர்வாகி உட்பட இரண்டு பேர் பலி.!
ஆடி அமாவாசையை முன்னிட்டு இந்துக்கள் பலரும் தங்களின் குலதெய்வ கோவில், பிரசித்திபெற்ற கோவில்களுக்கு சென்று பயபக்தியுடன் தெய்வங்களை வழிபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சென்னையில் உள்ள சூரக்குப்பம் பகுதியை சேர்ந்த அதிமுக பெண் நிர்வாகி கௌரி. இவரின் உறவினர் அஞ்சாப்புலி. இவர்கள் இருவரும் இன்று கடலூர் மாவட்டம், பண்ரூட்டி, சேத்தியாத்தோப்பு பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்றுள்ளனர்.
கோவிலுக்கு சென்று வருகையில் சோகம்
பின்னர் இருவரும் வீட்டிற்கு திரும்பிக்கொண்டு இருந்த நிலையில், பனிக்கன்குப்பம் பகுதியில் காரின் டயர் வெடித்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார், ஆட்டோ மீது மோதி விபத்தில் சிக்கியது.
இதையும் படிங்க: நிஞ்சா ரேஸ் பைக் மோதி காவலர் பரிதாப பலி; சென்னையில் சோகம்.!
2 பேர் பலி, 5 பேர் படுகாயம்
இவ்விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த 5 பேர் படுகாயமடைந்த நிலையில், 2 பேர் உயிரிழந்தனர். விசாரணையில் அவர் அதிமுக நிர்வாகி மற்றும் அவரின் உறவினர் என்பது தெரியவந்தது. இந்த விஷயம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதையும் படிங்க: டூ-வீலர் மீது கார் மோதி பயங்கர விபத்து; தாய்-தந்தை, 2 குழந்தைகள் என குடும்பமே பலி.!