மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திடீரென ரீசார்ஜ் விலையை உயர்த்திய ஏர்டெல் நிறுவனம்... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!!
இந்தியாவில் அதிகம் பயன்படுத்து நெட்வொர்க்கில் ஏர்டெலும் ஒன்று. தற்போது நாடு முழுவதும் 5 ஜி சேவைக்கான பணியை ஏர்டெல் தொடங்கியுள்ளது. இந்நிலையில் ஏர்டெலானது வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தும் விதமாக ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தியுள்ளது.
அதன்படி ஏர்டெலானது தனது குறைந்தபட்ச மாதாந்திர ரீசார்ஜ் தொகையை ரூ 99 யிலிருந்து ரூ 155 ஆக உயர்த்தியுள்ளது. இச்செய்தி ஏர்டெல் வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. 155 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 1 ஜிபி டேட்டா, 300 எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிடெட் கால் இவை அனைத்து 24 நாட்கள் மட்டுமே.
தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, பீகார், உபி, ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் இந்த விலை உயர்வானது அமலுக்கு வந்துள்ளது. இதனால் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்து வருகின்றனர்.