மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வானதி சீனிவாசன் வெற்றி பெற்றதற்கு தல ரசிகர்கள் காரணமா.? அக்கா ஜெயிச்சுட்டிங்க..! சொன்னதை எப்போ செய்வீங்க.?
தல ரசிகர்கள் வலிமை படத்தின் அப்டேட்டுக்காக வெறித்தனமாக காத்திருக்கிறார்கள் என்றே கூறலாம். அஜித் ரசிகர்கள் படக்குழு துவங்கி அயல் நாட்டுக்கு கிரிக்கெட் வீரர், முதலமைச்சர், பிரதமர் வரை அனைவரிடமும் வலிமை அப்டேட் கேட்டுள்ளனர். ரசிகர்களின் செயல்களால் அதிருப்தி அடைந்த நடிகர் அஜித் அவர்களை பொறுமையாக இருக்க கூறி அறிக்கையும் வெளியிட்டிருந்தார்.
இந்தநிலையில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட ன் பாஜக தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் அவர்களிடம் தேர்தலுக்கு முன்பு நெட்டிசன் ஒருவர் ட்விட்டர் பக்கத்தில் வலிமை அப்டேட் எப்போது கிடைக்கும் என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த வானதி சீனிவாசன் "நான் வெற்றி பெற்ற உடன் நிச்சயமாக வலிமை பட அப்டேட் கிடைக்கும் தம்பி” என பதிவிட்டிருந்தார்.
அக்கா ஜெய்ச்சிட்டீங்க வாழ்த்துக்கள்
— ᎠᎬᎬᏢᎪᏦ ™ (@DeepakOfff) May 3, 2021
நீங்க ஜெய்ச்சா வலிமை அப்டேட் வாங்கி தாரேன் சொன்னியல்லா வாங்கி தாங்க#Valimai https://t.co/Cx66Cxo5my
இந்தநிலையில், கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட பாஜக தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை சுமார் 1900 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். தற்போது வானதி சீனிவாசன் வெற்றி பெற்றதை தொடர்ந்து அஜித் ரசிகர்கள் எப்போது அப்டேட் கிடைக்கும் என்று கேள்வி கேட்கத் துவங்கி உள்ளனர்.
அஜீத் பேன்ஸ் க்கு வலிமை அப்டேட் க்காக வானதி அக்கா க்கு ஓட்டு குத்திட்டாங்க..
— ℳsd Kutty (@its_MsdKutty) May 2, 2021
Congrats ajith fans valimai update on the way https://t.co/6T40agyuLX