திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
2.5 கோடி எல்லாம் இல்லை! கொரோனா நிவாரணத்திற்காக நடிகர் அஜித் கொடுத்த தொகை எவ்வளவு தெரியுமா?
தமிழகத்தில் கொரோனா பரவலின் 2ஆம் அலை தற்போது தீவிரமாக பரவி வருகிறது. தமிழகத்தில் நாளொன்றுக்கு கொரோனா பாதிப்பு 30 ஆயிரத்திற்கு மேலாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பொதுமக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றது.
மேலும் கொரோனாவை எதிர்கொள்ள ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய படுக்கைகளை அமைத்தல், ஆர்.டி.பி.சி.ஆர். கிட்டுகள், உயிர்காக்கும் மருந்துகள், தடுப்பூசிகள் மற்றும் பிற மருத்துவக் கருவிகளை வாங்குதல் போன்ற கொரோனா நிவாரண நடவடிக்கைகளுக்கு நிதி தேவைப்படுகிறது. இந்தநிலையில், நமது சமுதாயத்தின் ஒவ்வொரு பிரிவினரும் தங்களால் இயன்ற வகையில் முதல்வரின் நிவாரண நிதிக்கு தங்களால் முடிந்த உதவிகளைச் செய்யலாம் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அண்மையில் அறிவித்தார்.
Official announcement pic.twitter.com/XsQ6yMnx3k
— Suresh Chandra (@SureshChandraa) May 14, 2021
அதனை தொடர்ந்து நடிகர் அஜித்குமார் வங்கி பரிவர்த்தனை மூலம் கொரோனா நிவாரணத்திற்காக ரூ.2.5 கோடி நிதி அனுப்பியுள்ளதாக சமூகவலைத்தளங்களில் தகவல்கள் பரவியது. இந்நிலையில் அவரது செய்தித் தொடர்பாளர் சுரேஷ் சந்திரா நடிகர் அஜித் கொரோனா நிவாரண நிதிக்காக ரூ 25 லட்சம் வழங்கியுள்ளதாக அதிகாரபூர்வமாக விளக்கம் அளித்துள்ளார்.