#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஐயோ போச்சே.. பால் குடித்துவிட்டு உறங்கிய 11 மாத குழந்தை பலி.. தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி..!
ஈரோடு மாவட்டம் சிவகிரி கருக்கபாளையம் பகுதியில் வசித்து வருபவர்கள் குணசேகரன் - கிருத்திகா தம்பதியினர். குணசேகரன் அப்பகுதியில் உள்ள கோயிலில் பூசாரியாக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு 3 வயதில் மகன் ஒருவர் உள்ள நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் கிருத்திகாவிற்கு மீண்டும் ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
மேலும் இந்த குழந்தையானது குறை பிரசவத்தில் பிறந்ததாகவும், இதனால் அந்த குழந்தைக்கு அடிக்கடி மூச்சு திணறல் ஏற்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் நேற்று காலை கிருத்திகா தனது குழந்தைக்கு பால் கொடுத்து தூங்க வைத்து விட்டு அன்றாட வேலைகளை பார்ப்பதற்காக சென்றுள்ளார்.
பின்னர் வேலை முடிந்து தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை பார்ப்பதற்காக கிருத்திகா சென்றுள்ளார். அப்போது குழந்தை எந்த ஒரு அசைவும் இல்லாமல் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த குழந்தையின் தாய் அலறி சத்தம் போட்டு உள்ளார். இதனையடுத்து அங்கிருந்தவர்கள் உடனடியாக குழந்தையை தூக்கிக்கொண்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
இதனைதொடர்ந்து மருத்துவமனைக்கு சென்ற குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதனைக் கேட்ட அதிர்ச்சடைந்த பெற்றோர் கதறி துடித்த சம்பவம் அங்கிருந்தவர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.