திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ஐயோ போச்சே.. திருமணத்திற்கு மாப்பிள்ளை பார்த்த பெற்றோர்.. இறுதியில் பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!
கோவை மாவட்டம் சுந்தரபுரம் பகுதியில் வசித்து வருபவர் பொன்னுச்சாமி. இவருக்கு சரண்யா என்ற மகள் ஒருவர் உள்ளார். இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். சரண்யாவிற்கு பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்க முடிவு செய்து வரன் பார்த்து வந்துள்ளனர்.
இதனை சரண்யாவிடமும் பெற்றோர் தெரிவித்திருந்த நிலையில் சரண்யாவிற்கு இதில் விருப்பமில்லை என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் சரண்யாவின் பெற்றோர் கோயிலுக்கு சென்று விட்டு அங்கிருந்து சரண்யாவை அலைபேசி மூலம் தொடர்பு கொண்டு உள்ளனர். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் சரண்யா அலைபேசி அழைப்பை எடுக்காததால் சரண்யாவின் பெற்றோர் பதற்றம் அடைந்துள்ளனர்.
பின்னர் சரண்யாவின் வீட்டிற்கு அருகில் உள்ள நபருக்கு அலைபேசி மூலம் தொடர்பு கொண்டு சரண்யாவை பற்றி கேட்டுள்ளனர். அப்போது அந்த நபர் சரண்யாவின் வீட்டிற்கு சென்று பார்த்த போது தூக்கில் தொங்கிய நிலையில் சரண்யா சடலமாக இருந்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த நபர் சரண்யாவின் பெற்றோர் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து தகவலின் பேரில் அங்கு விரைந்து வந்த காவல்துறையினர் சரண்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.