திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
தலைக்கேறிய மது போதை.. இரும்பு கம்பியால் மீனவரை தாக்கி அட்டூழியம்.. கைது நடவடிக்கையில் போலீஸ்..!
தூத்துக்குடி பூபால்ராயர்புரம் பகுதியில் வசித்து வருபவர் அந்தோணிசாமி. இவருக்கு சார்லஸ்(40) என்ற மகன் ஒருவர் உள்ளார். இவர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார்.
இந்நிலையில் சம்பவத்தன்று சார்லஸ் திரேஸ்புரம் கடற்கரை பகுதியில் நடந்து சென்றுள்ளார். அப்போது தலைக்கேரிய மதுபோதையில் அங்கு வந்த போதை ஆசாமிகள் சார்லஸை இரும்பு கம்பியால் கடுமையாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.
இதனையடுத்து சார்லஸ் தரப்பில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் திரேஸ்புரம் மாதவன் நாயர் காலனி பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் என்ற ஜெமினி மற்றும் தங்கராஜ் ஆகியோர் சார்லஸை இரும்பு கம்பியால் தாக்கியது தெரிய வந்தது.
இதனையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இரும்பு கம்பியால் தாக்கப்பட்ட சார்லஸ் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.