திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
கழுத்தை கரகரவென அறுத்த கணவன்... கண்ணை மறைத்த குடி வெறி... காவல்துறை தீவிர தேடுதல் வேட்டை.!
விழுப்புரம் அருகே மது போதை வெறியால் மனைவியை கணவன் கழுத்து அறுத்து படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக தப்பியோடிய கணவனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் சாலமேடு ஜீவராஜ் நகரை சேர்ந்தவர் வடிவேல். கட்டிடத் தொழிலாளியான இவர் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு திவ்யா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மதுவிற்கு அடிமையான வடிவேல் அடிக்கடி குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்திருக்கிறார். இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டிருக்கிறது.
இந்நிலையில் நேற்று மாலை அவரது வீட்டில் திவ்யா கலத்தெடுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் இது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் திவ்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் கொலை வழக்கு பதிவு செய்து தீவிரமான விசாரணையில் ஈடுபட்டனர்.
காவல்துறையின் முதல் கட்ட விசாரணையில் திவ்யாவின் கணவரான வடிவேல் அவரை கொலை செய்திருப்பது தெரிய வந்திருக்கிறது. சில நாட்களுக்கு முன் சண்டை போட்டு பிரிந்து சென்ற மனைவியை அவரது தாய் வீட்டில் இருந்து அழைத்து வந்திருக்கிறார். மீண்டும் இருவருக்குமிடையே தகராறு ஏற்படவே வடிவேல் வீட்டிலிருந்த கத்தியை எடுத்து திவ்யாவின் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளார் என்று தெரிய வந்திருக்கிறது. கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய வடிவேல் காவல்துறை தீவிரமாக தேடி வருகின்றனர்.