#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தோல்வியடைந்த விரக்தியில் அமமுக வேட்பாளர் தற்கொலை முயற்சி.! அதிர்ச்சி சம்பவம்.!!
தேர்தலில் தோல்வியடைந்ததை தாங்கி கொள்ள முடியாமல் அமமுக பெண் வேட்பாளர் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தனித்துப் போட்டியிட்டது. இந்த தேர்தலில் பல இடங்களில் அமமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
இந்தநிலையில், விளாத்திகுளம் பேரூராட்சி 8-வது வார்டில், அமமுக சார்பில் போட்டியிட்ட ராமஜெயம் என்ற பெண் வேட்பாளர் 5 வாக்குகள் மட்டுமே பெற்று படுதோல்வி அடைந்துள்ளார். இந்தநிலையில், தோல்வி விரக்தியில் அவர் எறும்புப்பொடி சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதனையடுத்து எறும்புப்பொடி சாப்பிட்ட ராமஜெயத்தை அவரது குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். தற்போது அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தோல்வி விரக்தியில் அவர் எறும்புப்பொடி சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.