மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#Breaking டிடிவி தினகரனை முதல்வராக்க தீர்மானம்.! சூடுபிடிக்கும் அரசியல் களம்.!
அதிமுகவை மீட்டெடுக்க வேண்டும் எனவும் தினகரனை முதல்வராக்க வேண்டும் எனவும் அமமுக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
அதிமுகவை மீட்டெடுத்து டிடிவி தினகரனை முதல்வராக்க வேண்டும் என்று இணைய வழியில் நடந்த அமமுக பொதுக்குழுவில் செயற்குழு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பின் அமமுகவுக்கு தலைவரை நியமிக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் முழுமையாக பின்பற்றி தமிழகத்தின் 10 இடங்களில் காணொளி வாயிலாக நடைபெற்றது.
காணொலியில் நடந்த கூட்டத்தில் டிடிவி தினகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகோண்டனர். இதில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதிமுகவை மீட்டெடுக்க அயராது உழைக்க வேண்டும். டிடிவி தினகரனை முதல்வராக்க வேண்டும். கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தேர்தல் பணிகள் தொடர்பான அனைத்து விஷயங்களிலும் முடிவெடுக்க டிடிவி தினகரனுக்கு அதிகாரம் உள்ளிட்ட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.