அமமுக முக்கியப்புள்ளி உட்பட ஒரேநாளில் 10 ஆயிரம் தொண்டர்கள் அதிமுகவில் இணைவு.. குலுங்கிய எடப்பாடி., கொண்டாடும் தொண்டர்கள்.!



AMMK Party Supporter Join AIADMK

 

இன்று ஒரேநாளில் அதிமுகவில் வெவ்வேறு கட்சியை சேர்ந்தவர்கள் தங்களை அக்கட்சியில் இருந்து விலக்கி அதிமுகவில் இணைந்தனர்.

தென்காசி வடக்கு மாவட்ட அமமுக செயலாளர் அய்யாதுரை தலைமையில், அக்கட்சியில் இருந்து விலகி 100க்கும் மேற்பட்டோர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் தங்களை இணைத்துக்கொண்டனர். அதனைத்தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. 

அப்போது பேசிய எடப்பாடி பழனிச்சாமி, "அய்யாதுரை தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் தங்களை கழகத்தில் இணைத்துக்கொண்டனர். தமிழகம் முழுவதும் பல்வேறு கட்சியில் இருந்து விலகி இன்றைய நாளில் மொத்தமாக 10 ஆயிரம் பேர் அதிமுகவில் தங்களை இணைத்துக்கொண்டார்கள்.

AIADMK

நமது ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் திமுக ஆட்சியில் நிறுத்தப்பட்டுள்ளன. திமுக ஆட்சியில் பெரிதான திட்டங்கள் ஏதும் கொண்டு வரப்படவில்லை. நாம் கொண்டு வந்த மருத்துவக்கல்லூரிகள் மற்றும் சட்டக்கல்லூரிக்கு அவர்கள் உரிமை கொண்டாடுகிறார்கள். 

அதிமுக ஆட்சியில் பல திட்டங்கள் கொண்டு வரப்பட்டது. திமுக ஆட்சியில் பெரிய திட்டங்கள் ஏதும் கொண்டு வரப்படவில்லை. விவசாயிகளுக்கு ஆதரவாக இருக்கும் கட்சி அதிமுக மட்டும் தான்" என்று தெரிவித்தார்.