மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கோபித்துக்கொண்டு தாய் வீட்டிற்கு சென்ற மனைவி.. திரும்பி வர மறுப்பு தெரிவித்ததால் மனமுடைந்து கணவர் எடுத்த விபரீத முடிவு.!
ஈரோடு கருங்கல்பாளையம், வண்டியூரான் கோவில், கலைஞர் நகரில் வடிவேல் தனது மனைவி கலையரசி மற்றும் இரண்டு மகள்களுடன் வசித்து வந்துள்ளார். இவர்கள் கூலி வேலை பார்த்து வந்ததாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் வடிவேலு குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் சம்பவத்தன்று வடிவேலு மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கலையரசி அவருடன் சண்டை போட்டுள்ளார்.
இதனையடுத்து இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் போதையில் இருந்த வடிவேலு கோபமுற்று அரிசி அளக்கும் படியால் கலையரசியை தாக்கியுள்ளார். அப்போது கலையரசி அலறி துடித்த சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து கலையரசி சிகிச்சைக்கு பின் தனது மகள்களுடன் தன் தாய் வீட்டிற்கு சென்று தங்கியுள்ளார். அப்போது வடிவேலு கலையரசியை சமாதானம் செய்ய முயற்சித்துள்ளார். ஆனால் கலையரசி கணவரோடு செல்ல மறுத்துவிட்டார்.
இதனால் மனமுடைந்த வடிவேலு தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் வடிவேலு மருத்துவமனைக்கு செல்லும் வழியிலே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து ஈரோடு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.