கட்சி துவங்கியது முதல், எங்கே சென்றாலும் அதை செய்யும் விஜய்.! ஆச்சரியத்தில் தொண்டர்கள்.!
கள்ளக்காதலில் ஆட்டோ டிரைவர்... மனைவி கண்டித்ததால் எடுத்த விபரீதம் முடிவு.!
கோவை மாவட்டத்தில் வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பில் இருந்த கணவனை மனைவி கண்டித்ததால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
கோவை மாவட்டம் ரத்தினபுரி, கந்தசாமி கவுண்டர் தெருவை சேர்ந்தவர் தினேஷ்குமார். ஆட்டோ ஓட்டுநரான இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் தினேஷ் குமாருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டிருக்கிறது.
இந்தப் பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறி உள்ளது. தினேஷ் குமார் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று உல்லாசமாக இருந்திருக்கிறார். இந்நிலையில் இந்த விஷயம் அக்கம் பக்கத்தினர் மூலமாக அவரது மனைவிக்கு தெரிய வரவே கணவரை கண்டித்துள்ளார். இது தொடர்பாக கணவன் மற்றும் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு இருக்கிறது.
இந்நிலையில் சம்பவ தினத்தன்று வீட்டிற்கு குடிபோதையில் வந்த தினேஷ்குமார் மனைவியை அவதூறாக பேசி அடித்து சித்திரவதை செய்துள்ளார். இதனால் அவரது மனைவி கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதனைத் தொடர்ந்து வீட்டில் தனியாக இருந்த தினேஷ்குமார் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.