திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
குடிபோதையில் மின் கம்பியை பிடித்த முதியவர்; உடல் கருகி பலி.. பழனியில் சோகம்..!
முதியவர் ஒருவர் மதுபோதையில் மின் கம்பியை பிடித்ததில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே பழைய ஆயக்குடியில் வசித்து வந்தவர் வடிவேல் (52). இவர் கூலிவேலை செய்து வந்தார். வடிவேலு மனைவியை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்ததால் மது பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார். இந்நிலையில் நேற்று மாலை அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு போதையில் இருந்த வடிவேல் தள்ளாடியபடி ரோட்டில் சென்றுள்ளார்.
ஆயக்குடி அரசு ஆஸ்பத்திரி எதிரில் நடந்து சென்ற வடிவேல் அதிக போதையில் திடீரென ரோட்டோரத்தில் இருந்த ஆயக்குடி தபால் நிலைய வீட்டின் மீது ஏறியுள்ளார். மது போதையில் இருந்த வடிவேல் வீட்டின் மீது சென்ற மின்சார வயரை கையில் பிடித்துள்ளார். அப்போது அவர் மீது மின்சாரம் பாய்ந்ததில் வடிவேல் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதை பார்த்த அங்கிருந்தவர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். இதையறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து, பொதுமக்கள் உதவியுடன் வடிவேலின் உடலை மீட்டு பழனி அரசு ஆஸ்பத்திரிக்கு உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர்.
குடிபோதையில் மின் கம்பியை பிடித்ததால் மின்சாரம் தாக்கி வடிவேல் உயிரிழந்தது குறித்து வழக்கு பதிவு செய்த ஆயக்குடி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.