ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
நண்பனின் மனைவி மீது தீராத ஆசை.. இடையூறாக இருந்த நண்பனை போட்டு தள்ளிய கட்டிட தொழிலாளி.!
அரியலூர் மாவட்டம் நாகம்பந்தல் பகுதியில் கட்டிட தொழில் செய்யும் ராஜமுருகன் தனது மனைவி ராஜகுமாரியுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று ராஜமுருகனை அவரது நண்பரான ராஜசிங்கம் போடிபாளையம் - மலுமிச்சம்பட்டி சாலையில் சுத்தியலால் தலையில் அடித்து கொலை செய்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த ராஜமுருகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அதனை தொடர்ந்து அங்கு விரைந்து வந்த காவல் துறையினர் ராஜமுருகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து ராஜசிங்கம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
இதில் ராஜசிங்கம், ராஜமுருகனின் மனைவி ராஜகுமாரியுடன் கடந்து இரண்டு ஆண்டுகளாக தகாத உறவில் இருந்துள்ளது தெரிய வந்துள்ளது. இவர்களது கள்ளக்காதலை பற்றி அறிந்த ராஜமுருகன் கோபமுற்று நண்பன் ராஜசிங்கம் மற்றும் மனைவியை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராஜசிங்கம், ராஜமுருகனை சுத்தியலால் தலையில் தாக்கி கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார்.
மேலும் நண்பனின் மனைவியோடு உள்ள தகாத உறவால் நண்பனை சுத்தியலால் அடித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.