மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சினிமா ஸ்டைலில் தப்பிச் செல்ல முயன்ற கைதி... எதிர்பாராத விதமாக மடக்கி பிடித்த காவல்துறை.!
பல்லடம் அருகே விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட கைதி காவல்துறையின் பிடியிலிருந்து தப்பி ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.
காவல்துறையினர் விசாரணை கைதி ஒருவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்காக அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது பல்லடம் பேருந்து நிலையம் அருகில் காவல்துறையின் பிடியிலிருந்து அந்த கைதி தப்பி செல்ல முயன்று இருக்கிறார்.
காவல்துறையிடம் இருந்து தப்பி ஓடிய கைதி எதிர்பாராத விதமாக எதனை வந்த மினி வேன் மீது மோதி நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். அவரை பின்தொடர்ந்து சென்ற காவல்துறையினர் மடக்கிப் பிடித்தனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளில் படமாக்கப்பட்டு இருக்கிறது அந்தக் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. காவல்துறையின் பிடியிலிருந்து கைதி தப்பி ஓடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.