மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வானுக்கும் எல்லை உண்டு நட்புக்கில்லையே .... அன்பில் உதித்த சூரியன்கள்.!அன்பில் ஆனந்த கண்ணீர்..! அன்பில் மகேஷ் போட்ட அசத்தல் பதிவு.!
திருச்சி தெற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட திருவெறும்பூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார். அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் பொய்யாமொழியின் மகனாவார். மேலும், திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் பி. தர்மலிங்கத்தின் பேரனும் ஆவார். இவருக்கு திமுக அமைச்சரவையில் முக்கிய பதவியான பள்ளி கல்வித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
அன்பில் மகேஷ் பொய்யாமொழி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகனும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினுக்கு நெருக்கமானவர்களுள் ஒருவராக இருந்துவருபவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக பதவியேற்பதற்கு முன்னர் தனது நண்பர் உதயநிதியை கட்டித் தழுவினார்.
இதனையடுத்து இதையடுத்து அன்பில் மகேஷ் பொய்யாமொழி அமைச்சராக பதவியேற்றபோது உச்சகட்ட சந்தோஷத்தில், உதயநிதியின் கண்கள் கலங்கியது . நேற்று வரை தனது நண்பராக இருந்த அன்பில் மகேஷ் இன்று அமைச்சராக உயர்ந்ததும் தன்னை மீறி அழுதுள்ளார்.
கழகமே ! நம் குடும்பம்!
— Anbil Mahesh (@Anbil_Mahesh) May 10, 2021
இயக்கமே! நம் இதயம்!
என்ற கொள்கையை
தரணிபோற்ற செய்த!
அன்பில் உதித்த சூரியன்கள்! pic.twitter.com/Cuy4SCa94S
அன்பில் மகேஷ் பொய்யாமொழி இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் கழகமே! நம் குடும்பம்! இயக்கமே! நம் இதயம்! என்ற கொள்கையை தரணிபோற்ற செய்த! அன்பில் உதித்த சூரியன்கள்! என தனது பதவியேற்பு வீடியோவுடன் அன்பில் மகேஷ் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவிற்கு பலரும் "நட்பின் இலக்கணமே", "நண்பேன்டா" என ஏராளமான கமெண்டுகளை குவித்து வருகின்றனர்..