திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க ஒரே தீர்வு! அன்புமணி ராமதாஸ் அதிரடி!
தமிழகத்திலுள்ள அனைத்து கடைகளை மூடுவதுடன், போக்குவரத்தையும் ரத்து செய்து முழு அடைப்பை மேற்கொண்டால் தான் கொரோனா வைரசின் பரவலையும், அதன் மூலமான மனிதப் பேரழிவையும் தடுக்க முடியும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க ஒரே தீர்வு இதுதான் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் நோய் பரவலும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் வேகமாக அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டிய அவசியமும், அவசரமும் ஏற்பட்டிருக்கிறது என தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலில் இரண்டாம் நிலையில் உள்ள இந்தியா மூன்றாம் நிலையான சமுதாயப் பரவலுக்கு ஆளாகாமல் தடுக்க ஒரே வழி ஊரடங்கு முறையைக் கட்டாயம் அமல்படுத்திட வேண்டும். இல்லையென்றால் இத்தாலி, பிரிட்டன் போன்ற நாடுகளின் நிலைபோல் ஆகிவிடும் என அன்புமணி ராமதாஸ் எச்சரித்துள்ளார்.
கொரோனா வைரஸ் எவ்வளவு ஆபத்தானது எத்தகைய பேரழிவை ஏற்படுத்தக்கூடியது என்பதற்கு இதுவரை கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் புள்ளி விவரங்கள் மற்றும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் புள்ளி விவரங்களும் தான் சாட்சியாகும். இந்த ஆபத்தை இந்தியா, குறிப்பாக தமிழகம் உணர வேண்டும் என தெரிவித்துள்ளார்.
எனவே, மனிதப் பேரழிவைத் தடுப்பதற்காக, வருமுன் காக்க தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும் அடுத்த 3 வாரங்களுக்கு முழு அடைப்பு மற்றும் ஊரடங்கை நடைமுறைப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.