மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பொறியியல் படிப்பிற்கான செமஸ்டர் தேர்வுகள் மீண்டும் மாற்றம்!.. அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு...!
அண்ணா பல்கலைகழக, பொறியியல் படிப்பிற்கான செமஸ்டர் தேர்வுகள் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கடந்தவாரம் வங்க கடலில் உருவான மாண்டஸ் புயல் காரணமாக அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பட்டது. டிப்ளமோ தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டது. இதை தொடர்ந்து மாண்டஸ் புயல் காரணமாக சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் ஒத்திவைக்கப்பட்ட செமஸ்டர் தேர்வுகள் தேதி அறிவிக்கப்பட்டது.
அதன்படி, டிசம்பர் 9-ஆம் தேதி நடைபெற இருந்த தேர்வுகள் டிசம்பர் 24-ஆம் தேதி சனிக்கிழமையும், டிசம்பர் 10-ஆம் தேதி நடைபெற இருந்த தேர்வுகள் டிசம்பர் 31-ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது.
இந்நிலையில், பொறியியல் படிப்பிற்கான செமஸ்டர் தேர்வுகள் இன்று மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பொறியியல் படிப்பிற்கான செமஸ்டர் தேர்வுகள் ஜனவரி 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.