மின் கட்டணத்தை உயர்த்துமாறு மத்திய அரசு வலியுறுத்தவில்லை.! பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம்.!



Annamalai talk about eb bill increased

தமிழகத்தில் 8 ஆண்டுகளுக்கு பின் மின் கட்டணம் உயர்த்தப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் மின்சாரத்துறையில் ரூ.12,647 கோடி கடன் உயர்ந்துள்ளது. அடுமட்டுமல்லாமல் மின் கட்டணங்களில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசு 28 முறை கடிதம் அனுப்பியுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

தமிழக அரசின் இந்த அறிவிப்பால் தமிழக மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் மின் கட்டண உயர்விற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசுகையில், மின் கட்டண உயர்வுக்கு மத்திய அரசை குறை கூற வேண்டாம்.

மின் கட்டணத்தை உயர்த்துமாறு மத்திய அரசு வலியுறுத்தவில்லை. மத்திய அரசு கொடுப்பது மானியம். தேவை எனில் பெற்றுகொள்ளலாம். தமிழக அரசு, மின் செயற்கை தட்டுபாட்டை ஏற்படுத்தி, வெளி மார்க்கெட்டில் இருந்து, அதிக பணம் கொடுத்து வாங்குகிறார்கள். நஷ்டத்தை தடுக்க நடவடிக்கை எடுக்காமல் வெளியில் இருந்து மின்சாரத்தை வாங்குவது சரியா? வரும் 23ம் தேதி மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி, அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.