மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#Justin | விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!!
விநாயகர் சதுர்த்தி வருகின்ற 18 தேதி அன்று கொண்டாடப்பட உள்ளது. இத்தினத்தை ஒட்டி வெளியூரில் இருந்து சென்னையில் வேலைபார்ப்பவர்கள் மற்றும் சொந்த ஊருக்கு செல்பவர்கள் சிரமம் கருதி மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
விநாயகர் சதுர்த்தி விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக நாளை (செப். 14) இரவு 8 மணி முதல் 10 மணி வரை மெட்ரோ ரயில் சேவை 9 நிமிட இடைவெளிக்கு பதிலாக 6 நிமிட இடைவெளியில் இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது.
மெட்ரோ ரயில்கள் இரவு 10 மணி வரை நெரிசல் மிக்க நேரங்களாக கருதப்பட்டு அதற்கேற்ப ரயில்கள் இயக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.