மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பொறியியல் படிப்பில் சேர ஜூன் 20 முதல் ஜூலை 19 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்: உயர் கல்வித்துறை அறிவிப்பு..!
நடப்பாண்டில் பொறியியல் படிப்புகளில் சேர வரும் 20 ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை குறித்து உயர்கல்வித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
பொறியியல் படிப்புகளுக்கு ஜூன் 19 ஆம் தேதி முதல் ஜூலை 20ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மாணவர்கள் தனியார் இ-சேவை மையங்கள் மூலமாகவும் விண்ணபிக்கலாம். அவர்கள் படித்த பள்ளிகள் மூலமும் விண்ணப்பிக்கலாம்.
இதற்காக பள்ளி கல்வித்துறை வாயிலாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 110 இடங்களில் மாணவர்கள் விண்ணப்பம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜூலை 20 முதல் 31ம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடக்கும். ஆக.,8 ம் தேதி தர வரிசைப்பட்டியல் வெளியிடப்படும்.
ஆகஸ்ட் 14 ஆம் தேதி பொறியியல் படிப்புகளுக்கான கவுன்சிலிங் துவங்கும். மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கவுன்சிலிங் ஆகஸ்ட் 16 தேதியிலும், அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆகஸ்ட் 22 ஆம் தேதியிலும் கவுன்சிலிங் துவங்கும் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.