அரபிக் கடலில் புதிய புயல் சின்னம்; இம்முறையும் வஞ்சிக்கப்படுகிதா தமிழகம்.!



arabic-cyclone---vayu---kujarath-heavy-rain---metrologi

இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே மாறி மாறி உருவாகும் புயல் சின்னம் தமிழகத்தை தவிர பிற மாநிலங்களுக்கு நல்ல மழை பொழிவை தந்து கொண்டிருக்கிறது. இதனால் தமிழக மக்கள் 'மழை முகம் காண பயிர் போல' மிகுந்த துயரத்தை அனுபவித்து வருகின்றனர்.

கடைசியாக அடித்த கஜா புயல் மழையை தவிர மற்ற அனைத்து துன்பங்களையும் மக்களிடம் விட்டுச் சென்றது. அதில் இருந்து இன்னும் மீளாத மக்கள் நல்ல மழைக்காக தவம் கிடக்கின்றன. சமீபத்தில் உருவான பனிப்புயல் திசைமாறி ஒரிசாவை சூரையாடியது. தற்போது தென்மேற்கு பருவக்காற்று மழை கேரளத்தில் நல்ல மழை பொழிவை தந்து கொண்டிருக்கிறது.



 

இதனால் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தமிழக பகுதிகளான கன்னியாகுமரி உள்ளிட்ட சில பகுதிகளில் பரவலாக மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் 
அரபிக்கடலில் புதிதாக உருவாகியுள்ள வாயு புயல் குஜராத்தில் கனமழையை கொடுக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

வாயு புயல் தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், புயல் காரணமாக வருகின்ற 13ம் தேதி அதிகபட்சமாக மணிக்கு 135 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று தொிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் நாளை மறுநாள் குஜராத் அருகே கரையை கடக்கும் என்று எதிா்பாா்க்கப்படுவதாக தொிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வாயு புயலால் வழக்கம்போல தமிழகத்திற்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. வாயு புயலால் தமிழகத்திற்கு பெரிய அளவில் மழை இருக்காது என்றும் தொிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வரும் 13 மற்றும் 14-ம் தேதி குஜராத்தில் கன மழைக்கு எச்சரிக்கை விடப்பட்ட நிலையில், அங்கு தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் குவிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், ராணுவம், கப்பற்படை, கடலோர காவல்படைகள் உஷார் நிலையில் இருக்க குஜராத் அரசு அறிவுறுத்தியுள்ளது.