மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அரக்கோணம் கொள்ளை வழக்கு: வடநாட்டு பாணியில் திருடும் உள்ளூர் கொள்ளையர்கள்.. பகீர் சம்பவத்தின் பரபரப்பு தகவல்.!
இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் கன்னிகாபுரம் கிராமத்தில், விவசாய நிலத்தில் வீடுகட்டி குடும்பத்தோடு வசித்து வந்தவர் புஷ்பகரன். இவரது வீட்டிற்கு கடந்த 17 ஆம் தேதி முகமூடி அணிந்து வந்த மர்ம நபர்கள், கதவை தட்டி இருக்கின்றனர். திருடர்கள் என்பதை உணர்ந்த புஷ்பகரன், கதவை திறக்காமல் இருந்துள்ளார்.
சுதாரித்துக்கொண்ட கொள்ளை கும்பல் துப்பாக்கியால் சுட்டதில் புஷ்பகரன், அவரது பாட்டி ரஞ்சிதம்மாள் படுகாயம் அடைந்தனர். கதவை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள், துப்பாக்கியால் குடும்பத்தினரை சுட்டு ரூ.25 ஆயிரம் பணம், 15 சவரன் நகைகள் ஆகியவற்றை பறித்து சென்றனர்.
இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த துறையினர், 6 தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில், அதே கிராமத்தை சார்ந்த பனிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் 1 மாணவரை கைது செய்தனர். மேலும், வியாசபுரம் பகுதியை சார்ந்த சின்னராசு (வயது 23) என்பவரையும் கைது செய்தனர்.
இவர்களிடம் நடந்த விசாரணையில், பாலவாய்சத்திரம் கிராமத்தை சார்ந்த ரேணு என்பவர் பாதுகாப்புக்காக ஏர் கன் வாங்கி வைத்த நிலையில், கடந்த அக். மாதம் நடந்த கொள்ளை சம்பவத்தில் ஏர் கன்ணையும் திருடி சென்றுள்ளனர். இந்த ஏர் கன்ணை எப்படி பயன்படுத்துவது? என யூடியூப் பார்த்து பயிற்சி எடுத்த 17 வயது சிறுவன், உறவினருடன் கொள்ளையில் ஈடுபட்டதும் அம்பலமாகியுள்ளது.