திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
உல்லாசத்திற்கு மறுத்த கள்ளக்காதலியை பழிவாங்க அதிர்ச்சி நடவடிக்கை; வெடவெடத்துப்போன பெண்ணின் கணவர்.!
அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம், வடவீக்கம் கிராமத்தில் வசித்து வருபவர் சிவா (வயது 35). இவர் தனியார் வங்கியில் ஊழியராக வேலை பார்க்கிறார். திருமணமாகி மனைவி, ஒரு குழந்தை இருக்கிறார்கள்.
இதனிடையே, இவர் வேலை விஷயமாக கடன் வசூலிக்கச்சென்ற இடத்தில், திருமணம் முடிந்து கணவருடன் வசித்து வந்த 39 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த பழக்கமானது பின்னாளில் கள்ளக்காதலாக மாறி இருக்கிறது. பெண்ணின் கணவர் சென்னையில் வேலை பார்த்து வந்ததை தனக்கு சாதகமாக்கி கள்ளக்காதல் மெருகேற்றப்பட்டு இருக்கிறது.
இந்நிலையில், சம்பவத்தன்று பெண்ணை வழக்கம்போல உல்லாசத்திற்கு சிவா அழைக்க, பெண் மறுத்த காரணத்தால் ஆத்திரமடைந்த அவர், தாங்கள் உல்லாசமாக இருந்த வீடியோவை பெருமையாக நண்பர்களுக்கு பகிர்ந்து இருக்கிறார்.
இதனை அவர்களில் ஒரு நண்பர் பெண்ணின் கணவருக்கு அனுப்ப, அதிர்ச்சியடைந்த அவர் ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்ற காவல் துறையினர் நடத்திய விசாரணையில் உண்மை அம்பலமாகவே, தனியார் நிறுவன ஊழியர் சிவா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.