அரியலூரில் 7 மாத கர்ப்பிணி உயிரிழந்த விவகாரம்; கருக்கலைப்பு செய்த ஓய்வுபெற்ற மருத்துவர், 2 செவிலியர்கள் கைது.!



Ariyalur Jayangondam pregnant Women Death Case 

 

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம், புதுக்குடி கரைமேடு கிராமத்தில் வசித்து வருபவர் வீரமணி. இவரின் மனைவி ரமணா. தம்பதிகளுக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். தற்போது மூன்றாவது முறையாக 7 மாத கர்ப்பிணியாக இருந்த ரமணா, மூன்றாவது குழந்தை வேண்டாம் என்று நினைத்து இருக்கிறார்.

இதற்காக மருத்துவமனையில் கருக்கலைப்பு மாத்திரை வாங்கி சாப்பிட்டு, இரத்தப்போக்கு ஏற்பட்டதாக கூறப்பட்டது. இதனையடுத்து, அரியலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்மணி, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதுதொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்திவந்த நிலையில், கருக்கலைப்புக்கு மருந்தகத்தில் மாத்திரை வாங்கி சாப்பிட்டதாக கூறப்பட்டதால், வருவாய்துறையினரும் விசாரணை நடத்தி வந்தனர். 

Ariyalur

இந்நிலையில், ரமணாவின் மறைவுக்கு சட்டவிரோத கருக்கலைப்பு முக்கிய காரணம் என்பது வருவாய் துறை அதிகாரிகளின் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. 

ஓய்வுபெற்ற பெண் மருத்துவர் தேன்மொழி, அவரின் உதவியாளர்கள் சக்தி தேவி மற்றும் வெற்றிச் செல்வி ஆகியோரின் உதவியுடன் கருக்கலைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில், பெண்மணிக்கு கருக்கலைப்பு செய்தது தான் உயிரிழப்புக்கு வழிவகை செய்தது உறுதி செய்யப்பட்டது. இதனால் மருத்துவர் மற்றும் அவரின் உதவியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.